டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம் 'கங்காரு'. இந்த படத்தினை இயக்குனர் சாமி இயக்குகிறார். பாடலாசிரியர் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சில மாதங்களுக்கு முன் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. பாடல் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நாயகனாக அர்ஜூனா நடிக்கிறார். கதாநாயகிகளாக நடிகை பிரியங்கா மற்றும் வர்ஷா அஷ்வதி நடிக்கிறார்கள். இதுவரை ஏடாகூடமான கதைகளை இயக்கிய சாமி இந்தப்படத்தில் அண்ணன், தங்கை உறவின் பாசத்தை வைத்து உருவாக்கி வருகிறார்.
கங்காரு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் நடைபெற்றது. ஆபத்தான மேட்டுப் பகுதியில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தின் நாயகி பிரியங்காவிற்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையினை இயக்குனரிடம் தெரிவித்துள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்க அந்த ஆசையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த ஆசை என்னவென்றால், படப்பிடிப்பு தளத்தில் கேமரா வைக்க பயன்படுத்தப்படும் 60 அடி ராட்சத கிரேனில் ஏறி பள்ளத்தாக்கினை பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். தைரியமாக அந்த கிரேனில் ஏறி அமர்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நடிகையின் தைரியத்தை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்....