ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தலைப்பை பார்த்துட்டு - ஏடாகூடாம கற்பனை பண்ணிடாதீங்கப்பு செய்தியை முழுசா படிச்சிட்டு முடிவு பண்ணுங்க. தமிழில் அவன் இவன் படத்தில் நடித்தவர் மதுஷாலினி இப்போது பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. ஒரு தனியார் நிறுவனம் மதுஷாலினியை வைத்து ஒரு தேர்தல் விழிப்புணர்வு விளம்பர வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது.
அந்த விளம்பரத்தில் சேலை கட்டி ஒரு கிழிந்த ரவிக்கை (டிசைனாம்) அணிந்து ஷோபாவில் காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறார். கால் விரல்களை முதலில் காட்டுகிறார்கள். அப்படியே மேலே போகும் கேமரா மதுஷாலியின் முகத்துக்குச் செல்கிறது. கையில் ஒரு பென்சிலை வைத்துக் கொண்டு அதனை தன் உட்டிலும், வைத்துக் கொண்டு படு செக்சியாக பார்க்கிறார். பென்சிலை ஆட்டியபடியே இப்படிப் பேசுகிறார்.
"சென்ற முறை நான் என்னுடைய விரலை பயன்படுத்தினேன். அதன் பின்னர் மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னுடைய விரலை நான் கவனமாக பயன்படுத்தியுள்ளேன். அதில் எனக்கு பிரமிக்கத்தக்க அனுபவம் கிடைத்துள்ளது. என்னைப்போலவே நீங்களும் சுகமான அனுபவம் பெற உங்கள் விரலை பயன்படுத்துங்கள். விரலை பயன்படுத்தி தவறாமல் வாக்களியுங்கள்" என்று சொல்கிறார்.
அவர் சொல்வதில் "விரலை பயன்படுத்தி வாக்களியுங்கள்" என்ற கடைசி வரியை முதலில் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை படியுங்கள். இது தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்தான் என்பது புரியும்.
இணைய தளங்களில் இப்போது வளைய வருவது இந்த விளம்பரம்தான்.