‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
காமசூத்ரா 3டி படத்தின் மூலம் அதிரடி புகழ்பெற்றவர் ஷெர்லின் சோப்ரா. இவர் தற்போது மலையாளத்தில் பேட் கேள் (மோசமான பெண்) என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இது மெலினா என்கிற இத்தாலி படத்தின் தழுவல் என்கிறார்கள். இதனை மலையாள இயக்குனர் ஷாஜியம் இயக்குகிறார்.
பேஷன் உலகில் வெற்றி பெற போராடும் ஒரு பெண் சந்திக்கும் பிரச்னைகள் தான் படம். கேரளாவில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் இந்தப் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், போஜ்புரி மொழிகளில் டப் செய்து ஒரே நேரத்தில் வெளியிட இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் இந்த மாத இறுதியில் நிறைவடைகிறது. ஜூலை மாதம் ரிலீசாகிறது.
இதுகுறித்து இயக்குனர் ஷாஜியம் கூறியதாவது: பேஷன் உலகில் ஒரு பெண் ஜெயிப்பதற்கு மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியது இருக்கிறது. உண்மையை உரைக்கும் விதத்தில் அதனை சொல்கிறோம். முதலில் இதில் நடிக்க தென்னிந்திய முன்னணி நடிகை ஒருவரைத்தான் கேட்டோம். அவர் கேரக்டரில் சில மாற்றங்களை செய்யச் சொன்னார். அதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை. உலகம் முழுவதும் அறிந்த முகமான ஷெர்லினை கேட்டோம் உடனே ஒப்புக் கொண்டார் என்றார்.
ஷெர்லின் கூறியதாவது: படத்தின் ஸ்கிரிப்ட் கேட்டவுடனேயே ஒத்துக் கொண்டேன். காரணம் நானும் பேஷன் உலகில் இருந்து வந்தவள்தான். படத்தில் வரும் பல சம்பவங்கள் என் நிஜ வாழ்க்கையில் நடந்தவை. அதனாலேயே விரும்பி நடிக்கிறேன். இந்தப் படம் இந்திய பேஷன் உலகின் இன்னொரு முகத்தை படம்பிடித்து காட்டுவதாக இருக்கும் என்றார்.