தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பழம்பெரும் தயாரிப்பாளரான பி.நாகிரெட்டியின் நினைவாக ஆண்டுதோறும் ஒரு சிறந்த மக்களுக்கு பிடித்த பொழுது போக்கு படத்திற்கு பி.நாகிரெட்டி நினைவு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2013ம் ஆண்டுக்கான விருது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு வழங்கப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி, நடித்திருந்தனர், பொன்ராம் இயக்கி இருந்தார். படம் 100 நாட்களை தாண்டி ஓடி வசூலையும் குவித்தது.
இன்று (மே 1)மாலை சென்னை காமராஜர் அரங்கில் நடக்கும் விழாவில் தயாரிப்பாளர் ஏவிஎம். சரவணன் விருதை வழங்குகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் பெற்றுக் கொள்கிறார். சிவகுமார், கே.ஆர்.விஜயா, இயக்குனர் பி.வாசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை விஜயா மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையினர் செய்து வருகிறார்கள்.