பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் புதிய திரைப்படம் வலை. ஜி.பாலமுருகன் என்பவர் இயக்குகிறார். கோல்டன் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜி.மோகன்ராஜ் தயாரிக்கிறார், சீனு ஒளிப்பதிவு, தேவன் இசை. நாராயண், பூர்ணாஸ்ரீ ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.
இன்றைய நாகரீக உலகில் செல்போன்கள், மற்றும் இணையதளங்கள் மூலம் இளைஞர்கள் எப்படி சீரழிகிறார்கள் என்பதை யதார்த்தமாக சொல்லும் கதை. அப்படி சீரழியும் மாணவர்களை காப்பாற்றும் சமூக ஆர்வலர்களாக கல்யாண பரிசு தொடரின் இயக்குனர் நந்தகுமார், மாமியார் தேவை தொடரின் இயக்குனர் சுலைமான் பாபு, வைராக்கியம் தொடரின் இயக்குனர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள். "ஒரு படத்தில் மூன்று சீரியல் இயக்குனர் நடிப்பது இதுவே முதல் முறை. ஒரு வித்தியாசமான முயற்சியாக இதை செய்கிறோம்" என்கிறார் படத்தின் இயக்குனர் ஜி.பாலமுருன்.