Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...!

30 ஏப், 2014 - 17:58 IST
எழுத்தின் அளவு:

குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா நசீம். மலையாளத்தில் இருந்து 'நேரம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ஜெய்யுடன் இவர் நடித்த திருமணம் எனும் நிக்காஹ் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கு அடுத்தப்படியாக எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை. 19 வயதான நஸ்ரியாவுக்கும், மலையாள இயக்குநர் பாசில் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம் சொல்ல இருமாதங்களில் திருமணம் நடைபெற இருக்கிறது.


இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக படங்களில் நடிக்க வேண்டி நஸ்ரியாவுக்கு அழைப்பு வந்துள்ளது. அப்படி கிட்டத்தட்ட 6 படங்கள் வரை அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இதில் மூன்று தெலுங்கு படங்களும், மூன்று தமிழ் படங்களும் அடங்கும். இந்த படங்கள் அனைத்தும் முன்னணி நடிகர்களின் படங்கள் தான். ஆனால், அவை எல்லாவற்றையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார் நடிகை நஸ்ரியா.


இதுப்பற்றி நஸ்ரியா தரப்பில் விசாரித்ததில், நஸ்ரியா ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் இருந்து அவர் பின்வாங்க மாட்டார். அந்தளவுக்கு மிகவும் பிடிவாதக்காரர். திருமணத்திற்கு முன்பாக சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது, ஷூட்டிங்கை முடித்து கொடுக்க கால அவகாசமும் இருந்தது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவருக்கு சினிமாவில் நடிப்பதை விட இல்லற வாழ்வில் சிறந்து விளங்கவே விருப்பம். ஆகையால் தான் 19 வயதில் திருமணத்திற்கு ஓ.கே. சொல்லிவிட்டார் என்கின்றனர்


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in