ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெரீனா படம் தொடங்கி மான் கராத்தே வரை சிவகார்த்திகேயன் நடித்தது எல்லாமே காமெடி படங்கள்தான். அவர் நடித்த வேடங்களும் காமெடி வேடங்களே. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அடுத்து அவர் நடித்த மான் கராத்தே படமோ வருத்தப்படாத வாலிபர் சங்கம் அளவுக்கு வெற்றியடையவில்லை. அதை வைத்து அவரது நலன்விரும்பிகள் சிவகார்த்திகேயனுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அதாவது தொடர்ந்து காமெடி வேடத்திலேயே நடித்து வந்தால் ஆபத்தாகிவிடும் என்பதே அவர்கள் செய்த அட்வைஸ்.
அதே எண்ணம் சிவகார்த்திகேயனுக்கும் இருந்திருக்கிறது. எனவே அடுத்து நடிக்கும் படங்களில் தன் பாணியை மாற்ற இருக்கிறாராம். தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்க உள்ள டானா படம் ஆக்ஷன் சப்ஜெக்ட்டாம். அந்தப் படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதற்காக தான் வொர்க்அவுட் பண்ணும் ஜிம்மிலேயே சிவகார்த்திகேயனை சேர்த்துவிட்டிருக்கிறார் தனுஷ். இப்படத்தின் வெற்றியை வைத்து அடுத்தடுத்து ஆக்ஷன் வேடம் பண்ணுவதா அல்லது, பழையபடி காமெடிக்கு திரும்புவதா என்பதை முடிவு செய்யப்போகிறாராம் சிவகார்த்திகேயன்.