ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் |
கார்த்தியை வைத்து வெங்கட்பிரபு இயக்கிய பிரியாணி படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. பிரியாணி படம் வணிக ரீதியில் வெற்றியடையவில்லை என்றாலும், அந்த சென்ட்டிமெண்ட்டைப் பற்றி கவலைப்படாமல் அடுத்து தலப்பாக்கட்டு என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த உஸ்தாத் ஹோட்டல் படத்தின் ரீமேக்கே இந்தப்படம். உஸ்தாத் ஹோட்டல் மலையாளப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். கதாநாயகியாக நடித்தவர் நித்யா மேனன்.
உஸ்தாத் ஹோட்டல் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் துல்கர் சல்மானையே நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையில் துல்கர் சல்மான் நடித்த வாயை மூடி பேசவும் படம் அண்மையில் வெளியானது. அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே துல்கர் சல்மானுக்கு பதில் இப்போது விக்ரம் பிரபுவை கதாநாயகனாக கமிட் பண்ணி இருக்கின்றனர். மலையாளத்தில் திலகன் நடித்த வேடத்தில் தமிழில் ராஜ்கிரண் நடிக்கிறார். கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா தலப்பாக்கட்டு படத்தை இயக்குகிறார். தலப்பாக்கட்டு படத்தைத் தயாரிப்பது ராதிகா சரத்குமார்.