இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவைப்போலவே கேரளாவிலும் ஏகப்பட்ட தொழிற் சங்கங்கள் உள்ளன. அதில் சினிமா டெக்னீஷியன்கள் சங்கத்திற்கும் ஏ கிளாஸ் தியேட்டர் அதிபர்கள் சங்கத்திற்கும் அவ்வப்போது உரசல்கள் வரும். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ கிளாஸ் தியேட்டர் அதிபர்கள் கொச்சியில் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டி திறப்பு விழா நடந்தினார்கள். இந்த விழாவுக்கு மம்முட்டி மோகன்லால் உள்பட அத்தனை நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இதில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
டெக்னீஷியன்கள் சங்க செயலாளர் உன்னி கிருஷ்ணன் தூண்டுதலின் பேரில்தான் யாரும் கலந்து கொள்ள வில்லை என்று கருதிய தியேட்டர் அதிபர்கள். உன்னிகிருஷ்ணன் இயக்கி, மோகன்லால் நடித்துள்ள மிஸ்டர் பிராடு படத்தை எங்கள் தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று அறிவித்தனர். படம் வருகிற மே 8 ந் தேதி வெளிவர இருக்கிறது. மோகன்லால் படத்தை வெளியிடா விட்டால் ஏ கிளாஸ் தியேட்டர்களுக்கு எந்த புதுப் படத்தையும் தரமாட்டோம் என்று டெக்னீஷியன்கள் சங்கத் தலைவர் சிபிமலையில் அறிவித்துள்ளார்.
புதிய படங்களை தராவிட்டால் பிற மொழி படங்களை திரையிடுவோம் என்று தியேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த மோதலில் டெக்னீஷியன்கள் சங்கத்திற்கு மலையாள நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. பிரச்னையை சுமூகமாக பேசி தீர்க்கும்படி பிலிம் சேம்பர் கேட்டுக் கொண்டுள்ளது.