பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கும்கி நாயகி லட்சுமிமேனன் சில சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து மூன்றாம் தட்டு நடிகையாகவே இருந்து விட்டு போய் விடுவார் என்றுதான் கோலிவுட் கணித்தது. ஆனால், நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு அவரது சினிமா கேரியரே மாறிவிட்டது. முத்தக்காட்சி, குளியல் காட்சி என்று அம்மணி அமர்க்களப்படுத்தியதை அடுத்து, தற்போது மேல்தட்டு ஹீரோக்களும் லட்சுமிமேனன் பக்கம் திரும்பி நிற்கின்றனர்.
அதனால் இதுவரை நான் குடும்ப நடிகை, அதனால் கணுக்கால் கவர்ச்சியை கூட காட்ட மாட்டேன் என்று கறாராக பேசி வந்த லட்சுமிமேனன், தற்போது கதைக்கு தேவையான கிளாமர் காட்டி நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சில டைரக்டர்களின் காது கடித்து வருகிறார். அது மட்டுமின்றி, பர்பாமென்ஸ் நடிகை என்று பெயரெடுத்துவிட்ட என்னை, முன்னணி ஹீரோக்களின் படம் என்று சொல்லிக்கொண்டு டம்மி ஹீரோயினி ஆக்க நினைத்தால் அதற்கு நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று ஒரு அதிரடி கண்டிசனை எடுத்து போட்டுள்ளார் லட்சுமிமேனன்.
மேலும், நடிப்புக்காக எந்த தியாகமும் செய்யத்தயாராக இருக்கிறேன் என்ற கூறுபவர், வித்யாபாலன், நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் நடிப்பது போன்று டைட்டில் வேடங்களில் நடிப்பதற்கும் நான் தயார். எனது ஹைட் வெயிட்டான உடல்கட்டு, பைட் சீன்களுக்கு ரொம்ப மேட்சிங்காக இருக்கும். அதனால் அந்த மாதிரியான கதைகளில் என்னை நடிக்க வைத்தால், எந்த மாதிரி ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கவும் நான் ரெடியாகி விட்டேன் என்றும் தில்லாக கூறி வருகிறார் லட்சுமிமேனன்.
ஆக, லட்சுமிமேனனின் திறமை மீது நம்பிக்கை கொண்டுள்ள சில டைரக்டர்கள், அவரை மையப்படுத்தி கதை பண்ணும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.