தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மிஷ்கின் என்ற இயக்குநரை ஞாபகம் இருக்கிறதா? சற்றே வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் பேர் வாங்கியவர், முகமூடி போன்ற படங்களை எடுத்ததினால் ஏற்கனவே வாங்கிய பேரைக் கெடுத்துக்கொண்டார். ஜீவாவை வைத்து எடுத்த முகமூடி படத்தின் படு தோல்வி, அவரை வைத்து படம் எடுக்க எண்ணியிருந்த ஒரு சில தயாரிப்பாளர்களையும் தப்பித்தோம் பிழைத்தோம் என தலைதெறிக்க ஓட வைத்தது. எனவே வேறு வழியில்லாமல் தானே தயாரிப்பாளராகி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார் மிஷ்கின். தயாரித்து இயக்கியது மட்டுமல்ல, ஓநாயாகவும் அவரே நடித்தார்.
விமர்சகர்களால் பாராட்டப்பட்ட ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் வசூல் ரீதியில் வெற்றிபெறவில்லை என்று நாகரிகமாக சொல்வதைவிட படு தோல்வியடைந்தது என்பதே சரி. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் தயாரிப்பில் இருந்தபோது, தயாரிப்புச்செலவைவிட கூடுதலாக சில கோடி லாபம் வைத்து அந்தப் படத்தை வேறு ஒருவருக்கு விற்றார் மிஷ்கின். அந்தப் படத்தை வாங்கியவர் சொன்னபடி முழுத் தொகையையும் கொடுத்திருந்தால் மிஷ்கினுக்கு செம லாபம். நடந்ததே வேறு. படத்தை வாங்கியவர் பேசிய பணத்தைக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அப்போது நடந்த பஞ்சாயத்தில்..
மிஷ்கினுக்கு பணத்தைத் தர வேண்டியவர்கள், உங்களால்தான் எங்களுக்கு இத்தனை கோடி நஷ்டம் என்று மிஷ்கினை குறை கூறினார்களாம். அதை மிஷ்கினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடுப்பான மிஷ்கின் தன் வீடு, ப்ளாட் என சில சொத்துக்களை அவர்களின் பெயருக்கு எழுதிக்கொடுத்துவிட்டு விருட்டென்று கிளம்பி போய்விட்டாராம்.
அடப்பாவமே...!