ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உதவி இயக்குநராக இருந்தவர் ராமகிருஷ்ணன். இவர் படம் இயக்கும் முயற்சிகளில் இருந்தபோதுதான், குங்குமப்பூவும் கொஞ்சிப்புறாவும் என்ற படத்தில் எதிர்பாராதவிதமாக ஹீரோவாகி விட்டார். அதையடுத்து, ராசுமதுரவன் இயக்கிய கோரிப்பாளையம் படத்திலும் நாயகனாக நடித்தார். ஆனால் அதையடுத்து, ராமகிருஷ்ணனுக்கு ஹீரோ வாய்ப்புகள் வரவில்லை.
அதனால், தனது ஹீரோ இமேஜை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தனக்குத்தானே கதை பண்ணிக்கொண்டு சில தயாரிப்பாளர்களை தேடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு தயாரிப்பாளர் கிடைத்ததும் போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தை இயக்கி தானே நாயகனாகவும் நடித்தார்.
ஆனால், படத்தை எந்த நிறுவனமும் வாங்கி வெளியிட முன்வராததால், தயாரித்த பட நிறுவனமே 70 லட்சம் ருபாய் வரை செலவு செய்து படத்தை வெளியிட்டது. ஆனால், படம் ஒரு ஹவுஸ்புல் காட்சியைகூட சந்திக்கவில்லை. தியேட்டர்களில் ஈ ஆடுவதால் பெருத்த நஷ்டத்தை கொடுத்துள்ளது. அந்த வகையில், படத்தை 1.5 கோடியில் தயாரித்த தயாரிப்பாளருக்கு, படத்தை வெளியிட செலவு செய்த 70 லட்சத்தையும் சேர்த்து கிட்டத்தட்ட இரண்டே கால் கோடி செலவாகி விட்டதாம். ஆனால் படம் சம்பாதித்து கொடுத்ததோ வெறும் 15 லட்சம்தானாம். அதனால், இனிமேல் சாட்டிலைட் உரிமத்தை கொடுத்து கிடைக்கிறதை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.