நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
தமிழ் சினிமாவுக்கும், மும்பைக்கும் அப்படி என்ன உறவோ தெரியவில்லை. நாயகன் படத்தில் மணிரத்னம் ஆரம்பித்து வைத்த டிரண்ட் இன்று வரை போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த துப்பாக்கி, தலைவா மும்பையை களமாக கொண்ட படங்கள். தற்போது ஒரு காதல் படம் மும்பையை மையமாக கொண்டு தயாராகி வருகிறது. படத்தின் பெயர்கூட மும்பையில் ஒரு காதல் என்று வைத்திருக்கிறார்கள்.
சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடித்த தமன் குமார் ஹீரோ மலையாள நடிகை ஜென்சி மீனு ஹீரோயின். சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர் கவுதம் வெங்டேசன் டைரக்ட் செய்கிறார்.
படத்தைப் பற்றி அவர் கூறியதாவது: மும்பையில் நடக்கும் காதல் கதை. பொதுவாக காதலுக்கு ஏதாவது பிரச்னை வரும். இந்த காதலுக்கு வரும் பிரச்னை மும்பை சிட்டிதான். அது என்ன என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்கிறோம். சில விளம்பர படங்கள், ஆவணப் படங்கள் இயக்கிய அனுபவத்தில் இதனை டைரக்ட் செய்திருக்கிறேன். பெரும்பகுதி கதை மும்பையில் நடக்கிறது சில காட்சிகள் சென்னையிலும் இருக்கும். பாடல் காட்சிகள் நியூயார்க் நகரில் படமாக்கப்படுகிறது என்றார்.