‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ் நாட்டின் ஆன்மீக நகரம் கும்பகோணம். திரும்பிய பக்கம் எல்லாம் கோவில் கோபுரத்தின் கும்பம் தெரிவதால்தான் கும்பகோணம் என்ற பெயரே வந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக திருவிழா உலக புகழ்பெற்றது. சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை கும்பகோணத்தின் புகழ்பாடுகிறது.
அப்படிப்பட்ட கும்பகோணத்தின் வரலாற்றை கோவில் நகரம் கும்பகோணம் என்ற தலைப்பில் ஸ்ரீசங்கரா டி.வி தொடராக ஒளிபரப்புகிறது மொத்தம் 60 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரில் கும்பகோணத்தில் உள்ள கோவில்களின் ஸ்தல வரலாறுகள். கும்பகோணத்தில் பிறந்த ஆன்மீக வாதிகள், ஊருக்கு பெருமை சேர்த்த பெரியவர்கள். தமிழும், ஆன்மீகமும் வளர்ந்த மடங்கள் ஆகியவை பற்றியும் ஒளிபரப்பாகிறது. ஒரு சிறிய நகரத்தை பற்றி 60 எபிசோட்கள் கொண்ட தொடர் ஒளிபரப்பாவது இதுவே முதல் முறை.