அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ் சினிமாவில் விரும்புகிறேன் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் சினேகா. அதையடுத்து வேகமாக வளர்ந்த அவர் புன்னகை இளவரசி என்றும் அழைக்கப்பட்டார். ஆனால் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு தனது குடும்ப இமேஜை எந்தவகையிலும் பாதிக்காத கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவரும சினேகா, பிரகாஷ்ராஜூடன் உன் சமையல் அறையில் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்தநிலையில, சினேகா இடத்தை அடுத்து பிடிக்கப்போகிற நடிகை யார்? என்கிற எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் நிலவி வருகிறது. அதற்கு சில நடிகைகள் முயற்சி எடுத்தபோதும், தற்போது, காதல் பஞ்சாயத்து, கனா, மேல் போன்ற படங்களில் நடித்திருக்கும் நேகா, என்ற புதுவரவு நடிகை சிநேகா கிட்டத்தட்ட அவர் சாயலிலேயே நடித்திருப்பதால், அடுத்த சினேகா என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறார்.
இதுபற்றி நேகா கூறுகையில், என்னை கவர்ந்த நடிகைகளில் சினேகாவும் ஒருவர். அவர் படத்துக்குப்படம் ஹோம்லியாக நடித்ததால் அவரை மாதிரி நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. அதற்கேற்ப நான் தற்போது நடித்து வரும் படங்களிலும் கிளாமர் இல்லாத ஹோம்லியான வேடங்கள்தான் எனக்கு கிடைத்திருக்கிறது. அதோடு திரையில் நான் சினேகா மாதிரி இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். அது ரொம்ப பெருமையாக உள்ளது என்கிறார்.
மேலும், நான் கிராமத்து கதைகளில் அதிகமாக நடிக்க ஆசைப்படுகிறேன். காரணம், கிராமத்து கதைகளில் அதிக உயிரோட்டம இருக்கும். இயல்பான நடிப்பு வெளிப்படும். குறிப்பாக ப்ரியாமணி நடித்த பருத்திவீரன் போன்ற கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நேச்சுரலான கதைகளில நடிக்கும்போதுதான் விருதுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் அந்த மாதிரி கதைகளை அதிகமாக வரவேற்கிறேன் என்று சொல்லும் நேகா, சூர்யாவின் தீவிரமான ரசிகையாம். அதனால் அவர் மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான அஜீத், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களுடனும் ஒரு பெரிய ரவுண்டு வரவேணடும் என்ற ஆசையும் நேகாவிற்கு உள்ளதாம்.