தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அமெரிக்காவில் உள்ள தம்பா பே நகரில் 15வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. நேற்று (ஏப்ரல் 27) விருது வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த நடிகர் நடிகை, படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர், நடிகை
ஓட்டப்பந்தைய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பாக் மில்கா பாக் படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் நடித்த பர்கான் அக்தர் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்த தீபிகா படுகோனே சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகை விருதுகளும் பாஹ் மில்கா பாஹ் படத்திற்கே கிடைத்தது.
சத்ருஹன் சின்ஹா
இந்திய சினிமாவில் ஆற்றிய பணிகளுக்காக சத்ருகன் சின்ஹாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. "எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. நான் இன்னும் வெகுதூரம் போக வேண்டியது இருக்கிறது" என்றார் விருதை பெற்றுக் கொண்ட சத்ருஹன் சின்ஹா. "ஒரே ஒரு சூட்கேசுடன்தான் மும்பைக்கு வந்தேன். என்றாலும் நான் சரியான பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு 13ம் எண் ராசியில்லை என்று சொன்னார்கள். அந்த கருத்தை உடைத்து எறிந்துவிட்டேன். 2013 எனக்கு விருதுகளையும், வெற்றிகளையும் அள்ளித்த தந்த ஆண்டு" என்றார் தீபிகா படுகோனே பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் டிராவோல்டாவுக்கு சர்வதேச சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
தனுஷ்
சிறந்த அறிமுக நடிகருக்கான விருது தனுஷ்க்கு கிடைத்துள்ளது. ராஞ்சனா என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
விருது பட்டியல்...
சிறந்த நடிகர்: பர்கான் அக்தர் (பாக் மில்கா பாக்)
சிறந்த நடிகை: தீபிகா படுகோனே (சென்னை எக்ஸ்பிரஸ்)
சிறந்த அறிமுக நடிகர்: தனுஷ் (ராஞ்சனா)
சிறந்த படம்: பாக் மில்கா பாக்
சிறந்த கதை: பாக் மில்கா பாக்
சிறந்த இயக்குனர்: ராகேஷ் ஓம் மெஹ்ரா (பாக் மில்கா பாக்)
சிறந்த பாடகி: ஸ்ரேயா கோஷல்
சிறந்த பாடகர்: அஜீத் சிங்