ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தடையறத்தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கி வரும் படம் மீகாமன். இப்படத்தில் ஆர்யா - ஹன்சிகா ஜோடி சேர்ந்துள்ளனர். அதோடு, இதுவரை ஆர்யா நடித்த படங்களில் அதிரடி ஆக்ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தில் மொத்தம் 12 வில்லன்கள் உள்ளனர். அவர்களின் 7 பேர் பிரபலமானவர்கள். இவர்களுடன் ஆர்யா மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகள் படம் பார்க்கிறவர்களை திகிலடையச் செய்யும் வகையில், காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாம்.
மேலும், இதுவரை சந்தானம் போன்ற காமெடியன்களுடன் சேர்ந்து கொண்டு கதாநாயகிகளை காதலித்துக்கொண்டு திரிந்த ஆர்யா, இந்த படத்தில் விக்ரம் நடித்த அந்நியன், ஜெயம்ரவி நடித்த நிமிர்ந்து நில் படங்களைப்போன்று சமூக களையெடுக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். இந்தியாவிற்குள் நடக்கும் சில அதிருப்தியான மனிதர்களை அவர் எப்படி களை எடுக்கிறார் என்பதுதான் கதையாம். அப்படி அவர் செய்கிற விசயங்களை சஸ்பென்சாக கதை பண்ணயிருக்கிறாராம் மகிழ் திருமேனி.
அதோடு, இந்த படத்தில் ஆர்யா மட்டும்தான் ஹீரோ என்று இதுவரை விளம்பரப்படுத்தப்பட்டு வந்தபோதும், படத்தில் இன்னொரு ஹீரோவாக ரமணாவும் இருக்கிறார். அந்த வகையில், ரமணாவுக்கும் ஆர்யாவுக்கு இணையான வேடமாம். ஒரு கட்டத்தில் அவர் வில்லன்களால் கொடூரமாக கொல்லப்பட்டாலும், அவர் வருகிற காட்சிகளில் கூடுதல் விறுவிறுப்பு இருக்குமாம். ஆக, இந்த படம் ஹிட்டடித்தால் நாமும் மார்க்கெட்டில் பேசப்படும் நடிகராகி விடுவோம் என்று பெருத்த நம்பிக்கையில் நடித்துக்கொண்டிருக்கிறார் ரமணா.