ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. ஆனபோதும், தெலுங்கில் 6 படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டுத்தான் தமிழுக்கு வந்திருந்தார். அந்த வகையில், சிவகார்த்திகேயனைவிட அதிக படங்களில் நடித்த அனுபவம் பெற்றவர்தான் ஸ்ரீதிவ்யா. அதனால்தான் அந்த படத்தில் நடித்தபோது அதிகப்படியான ரீடேக் வாங்காமல், பல காட்சிகளை சிங்கிள் டேக்கில் ஓ.கே செய்து அப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், சூரி உள்பட அனைவரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா. ஆனபோதும், தெலுங்கு பெண்ணான அவருக்கு மொழி ஒன்றுதான் பிரச்னையாக இருந்திருக்கிறது. அதனால், காட்சிகளை ரிகர்சல் பார்க்கும்போது சிவகார்த்திகேயனிடம் கேட்டு தெரிந்து கொண்டு நடித்திருக்கிறார்.
அப்படி நடித்த ஸ்ரீதிவ்யா, அதையடுத்து, பென்சில், ஈட்டி, ஜீவா என சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அவர், தமிழ்நாட்டில் காலம் தள்ள வேண்டுமென்றால் தமிழ் பேசுவது முக்கியம் என்பதை தெரிந்து கொண்டு, தன்னைச்சுற்றியிருக்கும் உதவியாளர்கள் மூலமே தமிழை ஓரளவு கறறு தேறி விட்டாராம்.
அதனால்., தற்போது சிவகார்த்திகேயனுடன் டாணா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீதிவ்யா, படப்பிடிப்பு தளத்துக்கு வந்த முதல் நாளிலேயே அவருடன் தமிழிலேயே பேசினாராம். ஸ்ரீதிவ்யாவின் இந்த முயற்சியைக்கண்டு அசந்து போன சிவகார்த்திகேயன். உன்னோட திறமைக்கு இல்லேன்னாலும், உன் முயற்சிக்கு நீ பெரிய நடிகை ஆகிடுவே என்று மனதார அவரை பாராட்டினாராம். சிவகார்த்திகேயனின் கள்ளம் கபடமில்லாத அந்த பாராட்டு மொழி கேட்டு நெகிழ்ந்து போனாராம் ஸ்ரீதிவ்யா.