பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
பிரபல இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம். இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையிலும் கடுமையான பயிற்சி, போராட்டம் மூலம் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர். மேரி கோம் என்ற பெயரிலேயே அவரது வாழ்க்கை இந்தியில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தி சினிமாவின் நம்பர்-1 நடிகை ப்ரியங்கா சோப்ரா, தனது கமர்ஷியல் பார்முலாவை தூக்கி போட்டுவிட்டு மேரி கோமாக நடித்து வருகிறார். இதற்காக ப்ரியங்கா, மேரிகோமுடன் சில நாட்கள் தங்கியிருந்து அவரது மேனரிசங்களை கற்றதோடு, குத்துச் சண்டையின் அடிப்படையான விஷயங்களையும் கற்றுக் கொண்டு நடித்து வருகிறார்.
கதைப்படி உள்ளூர் வீராங்கனை ஒருவருடன் பிரியங்கா சோப்ரா மோதும் காட்சி ஒன்று தர்மசாலாவில் படமாக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநில நிஜமான குத்துச் சண்டை விராங்கனை, நிஜத்தில் மேரிகோமை எதிர்த்து சண்டை போட்டவர், ப்ரியங்காவுடன் மோதும் காட்சிகள் படமானது. அந்த வீராங்கனை வேகமாக முகத்தில் குத்த வரும்போது அதனை ப்ரியங்கா கையால் தடுக்க வேண்டும். கொஞ்சம் டைமிங் மிஸ் ஆக ப்ரியங்கா முகத்தில் நிஜ குத்து விழுந்தது.
மேக்அப்பை தவிர வேறு எதையும் பார்த்திராத மென்மையான ப்ரியங்காவின் முகத்தில் பலத்த காயம் பட்டு ரத்தம் கொட்டியது. அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இயக்குனர் உமங் குமார் படப்பிடிப்பை நிறுத்தினார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு செல்ல மறுத்த ப்ரியங்கா. இந்த காயத்துடனேயே படப்பிடிப்பை தொடரலாம் அது இயற்கையாக இருக்கும் என்று சொல்ல காயத்துடனேயே படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.
பிரியங்கா வாங்கிய குத்தும், அதனால் ஏற்பட்ட காயமும் படத்தில் அப்படியே இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி.