மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
கவுதம் கார்த்திக், ராகுல் ப்ரீத்தி சிங், நிகிஷா படேல் ஆகியோர் நடித்துள்ள என்னமோ ஏதோ படம் நேற்று (ஏப்ரல் 25) ரிலீசானது. இதில் ராகுல் ப்ரீத்தி சிங்கும், நிகிஷாவும் இரண்டு ஹீரோயின்கள் எனவும், இருவருக்கும் சமபங்கு இருக்கிறது என்றும் கூறிவந்தனர். ஆனால் படம் வெளிவந்த பிறகுதான் தெரிந்தது. நிகிஷா படேல் நடித்திருந்த பல காட்சிகள் படத்தில் இல்லை. அவர் கேரக்டர் ஒரு கெஸ்ட்ரோல் போன்று மாற்றப்பட்டிருந்தது. கதைப்படி ராகுல் ப்ரீத்தி சிங்கை பிரியும் கவுதமிற்கு நிகிஷா பட்டேல் மீது காதல் வந்து அதுவும் ஒரு காரணத்தால் பிரியும். இருவருக்கும் எப்படி காதல் உருவாகிறது என்கிற காட்சிகளே இல்லாமல் நேரடியாக இருவரும் காதலர்கள் என்கிற மாதிரி காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் நிகிஷா பட்டேல் தரப்பு மிகுந்த வருத்தத்தில் இருக்கிறது. என்றாலும் அதுபற்றி வெளிப்படையாக பேச தயங்குகிறார்கள். வளரும் நிலையில் இதை பெரிது படுத்தி பிரச்னைக்குரிய நடிகை என்று பெயரெடுக்க வேண்டாம் என்று நினைக்கிறார் நிகிஷா.