Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆன்மீகவாதியின் இயக்கத்தில், 'இது என்ன மாற்றம்'

26 ஏப், 2014 - 12:12 IST
எழுத்தின் அளவு:

திரைப்படம் இயக்கும் லட்சியத்துக்காக வாழ்வையே அர்ப்பணிப்பவர்கள் பலர். ஆனால் தீவிர ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு அதற்காக வாழ்வையே அர்ப்பணித்த ஒரு ஆன்மீகவாதி ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் . அது மட்டுமல்ல ." எனது இயக்கத்தில் வரும் ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும் . இனிமேல் திரைப்படங்களில் நல்ல விசயங்களை சொல்ல வருவோர்க்கு ஆலோசனைகள் மற்றும் கதைகளை தருவேனே தவிர , இனிமேல் வேறு எந்தப் படத்தையும் இயக்க மாட்டேன்" என்றும் கூறுகிறார் அவர். அதிசயம்தானே ?


பி.கே.ஜேம்ஸ் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷரத் பிரியதேவ் என்பவரது இசையில் புதுமுகங்கள் நடிப்பில் இது என்ன மாற்றம் என்ற படத்தை இயக்கி இருக்கும் சத்திய நாராயணன் என்பவர்தான் அந்த ஆன்மீக அதிசய இயக்குனர். இது என்ன மாற்றம் என்ற பெயரைப் பார்த்தால் எதோ காதலால் மனதுக்குள் வரும் விசயத்தை சொல்லும் படம் இது என்றுதானே பாழாய்ப்போன கோடம்பாக்க மனசு நினைக்கும் . ஆனால் இது முற்றிலும் வேறு மாதிரியான படம்.


தீட்சண்யமான கண்களோடு அழுத்தமான வார்த்தைகளில் ஆன்மீக உரை போல பேசும் இயக்குனர் சத்திய நாராயணனிடம் பேசுவதே ஒரு இதமான அனுபவமாக இருக்கிறது. "இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸ் அவர்கள் எனது முதலாளி . தேனிப் பக்கம் அவருக்கு சொந்தமான நிலங்களைப் பார்த்துக் கொண்டு ஆன்மீக வாழ்வு வாழ்பவன் நான். என் மனதில் எழும் ஒவ்வொரு விஷயமும் தானாக நடந்தது. ஒரு முறை தனிமையில் யோசித்துக் கொண்டு இருந்தபோது திரைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோமே . அது மட்டும் இன்னும் நடக்கவில்லையே என்ற யோசனை வந்து போனது .


எனது முதலாளி ஜேம்சிடம் சொன்னேன். அதற்கென்ன ஆரம்பித்து விடு , நானே தயாரிக்கிறேன் என்று இந்தக் கூலிக்காரனை இயக்குனராக்கி விட்டார் என் முதலாளி . நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. ஆனால் இயக்குவது சிரமமாகத் தெரியவில்லை ." என்றவரிடம் கதை என்ன என்று கேட்டபோது .. இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார் .


"உலகத்தில் தீமைகள் கெட்ட விஷயங்கள் அதிகரித்து விட்டன. கலிகாலம் என்பது மட்டும் இதற்கு காரணம் அல்ல. பிரபஞ்ச சக்தியின் தூண்டுதலும் அதற்கு காரணம். பிரபஞ்ச சக்தி தூண்டப்பட காரணம் நவீன மனிதர்களின் தீய சிந்தனையும் நேர்மைக் குறைபாடும், கலாச்சார சீரழிவுமே. இது என்ன மாற்றம் ? இது சரியா என்று இந்தப் படம் கேட்கும் .இப்படியே போனால் மனித இனம் எதிர்கொள்ள முடியாத ஒரு எதிர்விளைவை பிரபஞ்சத்திடம் இருந்து சந்திக்கும் . அதை எதிர்கொள்ளும் சக்தி மனித இனத்துக்கு இல்லை . ஆனால் இப்போது நினைத்தாலும் மனித இனம் நேர்மையான எண்ணங்களுக்கும் செயலுக்கும் திரும்பி தன்னை காத்துக் கொள்ள முடியும் என்பதை இந்தப் படம் சொல்லும்.


இந்தப் படத்தில் காதல் இல்லை . கதாநாயகி கதாபாத்திரம் மண்ணுக்கு வரும் தேவதை . கதாநாயகனோ நண்பர்களால் ஏமாற்றப்பட்டு துரோகத்தால் கொலை செய்யப்படும் நிலைக்கு ஆளாகிறான். இப்படி சாவதற்கு என்னை ஏன் இறைவன் படைத்தான் என்று எண்ணும்போது ஒரு மாற்றம் நடக்கிறது. படத்தில் உலக ஆன்மீக மாநாடு , உலக பொருளாதார மாநாடு , உலக மருத்துவ மாநாடு ஆகியவை முக்கிய விஷயங்கள். உலக அரசியல் பற்றியும் இந்தப் படம் பேசும் . " என்று கூறும் சத்திய நாராயணன் அடுத்து கூறும் விஷயம் ....


"காணமல் போன மலேசிய விமானம் சூரியனில் இருந்து எப்போதாவது வரும் ஒரு வித ஆபத்தான சிவப்புக் கதிர்களின் பாதையில் சிக்கி சுக்கு நூறாகி விட்டது . இது எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்காதீர்கள் . அறிவியல் சூரியனை எட்டிப் பார்க்கும். ஆனால் ஆன்மீகம் தொட்டுப் பார்க்கும் " என்கிறார் .


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in