இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பிரபலங்களின் பெயர்களில் ஏகபட்ட கணக்குகள் இருக்கின்றன. அவற்றில் எது அசல், எது போலியானது என்பதை கண்டுபிடிப்பதற்குள் மண்டை காய்ந்துவிடும். சம்மந்தப்பட்டவர்களே நேரடியாய் சொன்னால்தான் உண்டு. தமன்னா, காஜல்அகர்வால், சூர்யா, கார்த்தி ஆகியோர் சமூகவலைத்தளங்களில் எங்கள் பெயரில் இருப்பது நாங்கள் அல்ல என்று தெரிவித்துவிட்டனர்.
காமெடி நகடிர் சூரி பெயரில் தொடங்கப்பட்ட ஒரு ட்விட்டர் பக்கத்தில் ரஜினி உட்பட பல முக்கிய பிரமுகர்களைப் பற்றி சகட்டுமேனிக்கு விமர்சனம் பதிவிடப்பட்டது. அது பற்றி செய்திகளினால் சூரிக்கு பிரச்சனை ஏற்பட்டதும், காவல்துறையில் உள்ள சைபர்க்ரைம் பிரிவில் புகார் அளித்தார். சூரி பெயரில் மட்டுமல்ல, காமெடியன் சந்தானம் பெயரிலும் ட்விட்டரில் ஏகப்பட்ட அக்கவுண்டுகள் உள்ளன. அவற்றில் எது சந்தானத்தின் அக்கவுண்ட் என்று தெரியாமல் ரசிகர்கள் திகைத்து வந்த நிலையில், தன்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் இதுதான் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் சந்தானம். இதுதான் அவரது ட்விட்டர் அக்கவுண்ட்.. @iamsanthanam