இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அந்தக் காலத்து சரோஜாதேவியிலிருந்து இந்தக் காலத்து லட்சுமிராய் வரைக்கும் கன்னட தேசம் தமிழ் சினிமாவுக்கு நல்ல அழகு நடிகைகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் இப்போது வருகிறார் சவுஜன்யா. இவர் அங்கு டாப் ஹீரோயின் இல்லாவிட்டாலும் இதுவரை 15 படங்களில் நடித்து விட்டார். இயக்குனர் ஆனைவாரி ஸ்ரீதர் தனது சோக்கு சுந்தரம் படத்துக்காக சவுஜன்யாவை அழைத்து வந்திருக்கிறார். எம்.ஆர் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்கிறர், ஜேம்ஸ் விக்டர் இசை அமைக்கிறார்.
"வழக்கமான காதல் கதையை வித்தியாசமாக தருகிறோம். தான் காதலிக்கும் பெண்ணுக்கு வேறு இடத்தில் நிச்சயதார்த்தம் ஆகிவிடுகிறது. இந்த இடத்தில் வழக்கமாக ஹீரோ என்ன செய்வார். தாடி வைத்துக் கொண்டு தேவதாஸ் மாதிரி திரிவார். அல்லது நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை துரத்தி அடிப்பார், காதலியை கடத்திக் கொண்டு போவார். இது எதையும் செய்யாமல் புதிதாக ஒன்றை செய்கிறார். அதுதான் படத்தோட சஸ்பென்ஸ்" என்கிறார் இயக்குனர் ஆனைவாரி ஸ்ரீதர்.