‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இயக்குநர் விஜய்யின் அண்ணன் உதயா. சினிமாவிற்கு இவர் தான் முதலில் வந்தார். 'திருநெல்வேலி' எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரா ரா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் இன்று(ஏப்ரல் 22ம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதுவும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தனது மனைவியுடன் கொண்டாடினார். உதயா பிறந்தநாள் விழாவில் நடிகர் உதயா பேசியதாவது, இதுவரை என் பிறந்தநாள் விழாவை எளிமையாக வீட்டில் வைத்து தான் கொண்டாடியுள்ளேன். முதன்முறையாக இந்தமுறை விமரிசையாக கொண்டாடியுள்ளேன். காலையில் முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களிடம் ஆசி பெற்றேன். மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
சினிமாவில் நான் அறிமுகமானபோது இருந்த நிலைமை வேறு, இப்போது இருக்கும் நிலைமை வேறு. சினிமா முன்பை விட நிறையவே வளர்ந்துள்ளது. இப்போது எல்லாம் இரண்டு, மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது பிரபலமாகிவிட்டது. இது நல்ல விஷயம் தான். தனி ஹீரோவாக நடிப்பதை விட இரண்டு மூன்று ஹீரோவாக நடித்தால் நமது திறமையை காட்ட முடியும். விரைவில் நான் நடித்துள்ள ஆவிக்குமார் படம் ரிலீசாகப்போகிறது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இது தவிர தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கிறேன். இன்னும் நிறைய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எல்லாவிதமான ரோல்களிலும் நடிக்கும் நடிகர் உதயா, நல்ல நடிகர் உதயா என பெயர் எடுக்க வேண்டும். அதுவே என் ஆசை என்றார். மேலும் அமலாபால் - விஜய் பற்றி கேட்டபோது, இருவருக்கும் நல்ல பொருத்தம் என கூறினார்.