ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷில்பா மோஷன் ஒர்க்ஸ், வார்டு லைப் பிலிக் என்ற நிறுவனங்கள் இணைந்து மடிசார் மாமி என்ற படத்தை தயாரிக்கிறார்கள். ரஞ்சித் போஸ் என்பவர் இயக்குகிறார். மிதுன், மான்சி, காயத்திரி, பேபி அஞ்சலி நடிக்கிறார்கள். இந்த படம் துவங்கும் போது மடிசார் மாமி மதன மாமா என்று தலைப்பு வைத்திருந்தார்கள். இது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை அவமதிப்பதாக உள்ளது என்று அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு மடிசார் மாமி என்று படத்தின் தலைப்பை சுருக்கினார்கள்.
இந்த தலைப்புக்கும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தது. அதனால் வேறு வழி இல்லாமல் படத்தின் தலைப்பை புளிப்பு இனிப்பு என்று மாற்றியிருக்கிறார்கள்.
இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் சுஷாந்த் கத்ரு கூறியிருப்பதாவது: நீதிமன்ற உத்தரவுப்படியும், எந்த ஒரு மனிதனின் மனதையும் பாதிப்பது நல்ல சினிமாவாகாது, என்கிற உயரிய நோக்கத்தோடும் படத்தின் தலைப்பை புளிப்பு இனிப்பு என்று மாற்றி வைத்துள்ளோம். மே மாதம் படம் ரிலீசாகுது. இரண்டு மணி நேரம் முழு நீள காமெடி படமாக தயாரித்திருக்கிறோம். மற்றபடி எந்த சமுதாயத்தையும், தனி மனிதர்களையும் புண்படுத்தவில்லை. மடிசார் மாமி என்ற தலைப்பு வைத்தற்காக எங்கள் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். என்றார்.