ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் விஜய்க்கும், அமலாபாலுக்கு இருந்த காதல் கசிந்த கல்யாண செய்திகள் பரபரத்துக் கொண்டிருந்த நேரத்தில் சைவம் படத்துக்கு ஹாலிவுட் சவுண்ட் என்ஜினீயர்களை கொண்டு பின்னணி இசை அமைத்துவிட்டு திரும்பியிருக்கிறார் விஜய். பிரமாண்ட ஆக்ஷன் படங்களுக்கு ஆடியோ என்ஜினீயர்களாக பணியாற்றிய மர்ட்டி ஹம்பரரி, மற்றும் செரீஸ் ஜேக்கப்சன் சைவத்துக்கு பின்னணி இசை கோர்த்துள்ளனர். இவர்கள் கடைசியாக விஸ்வரூபம் படத்திற்கு இசை கோர்த்தனர். தமிழ்நாட்டில் இருந்து சென்ற சவுண்ட் என்ஜினீயர்கள் ராஜா கிருஷ்ணன், குனால் ராஜன் ஆகியோருடன் இணைந்து இவர்கள் பணியாற்றி உள்ளனர்.
சைவம் படத்தின் டைட்டில் தீம் இசை வேண்டாம் என்று ஹாலிவுட் சவுண்ட் என்ஜினீயர்கள் சொன்னார்களாம். ஆனால் விஜய் அதுதான் படத்துக்கு உயிரே என்று சொல்ல அதையே சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார்கள். படத்தை உலக தரத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்த இசை கோர்ப்பை முடித்து திரும்பியிருக்கிறார் விஜய்.