சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ஆன்மீக தொலைக்காட்சியான ஸ்ரீ சங்கரா டி.வி. ஆண்டுதோறும் சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நல்லோர் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் பல சாதனையாளர்களுக்கு நல்லோர் விருது வழங்கி கவுரவித்தது. பாரதிய வித்யா பவன் தலைவர் எல்.சபாரத்னம் தலைமையில் நடந்த விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் விருதுகளை வழங்கினார். அடையார் புற்று நோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா (வாழ்நாள் சாதனை), பத்ம சேஷாத்திரி பள்ளி குழுமங்களின் தலைவர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி (கல்வி), நல்லி குப்புசாமி (தொழில்), பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் (கலை), சுகி சிவம் (இலக்கியம்), டாக்டர் எல்.மகாதேவன் (மருத்துவம்) ஆகியோருக்கு நல்லோர் விருது வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் தலைமை செயல் இயக்குனர் ஹரிகிருஷ்ணன், கிருஷ்ணா ஸ்வீட் முரளி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.