பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் ''அச்சமுண்டு அச்சமுண்டு'' படத்தில் இணைந்து நடித்தபோது நட்பானார்கள். இந்த நட்பு பின்னாளில் காதலாக மாறி, பிறகு தம்பதியராகவும் இணைந்தனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை சினேகா, 'உன் சமையலறையில்', 'விடியல்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதேப்போல் பிரசன்னாவும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த நட்சத்திர தம்பதியர், இப்போது புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்கள். கேம் சேஞ்சர் என்டர்டெயிண்மென்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளனர். முதல்படத்தை இயக்குநர் பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த ஒருவருக்கு தங்களது பட தயாரிப்பில் வாய்ப்பு அளித்துள்ளனர். இப்படம் பற்றிய முழு அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் நல்ல திறமையான கலைஞர்களுக்கு தங்களது நிறுவனத்தில் வாய்ப்பு தரப்போவதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.