தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
தமிழ் சினிமாவுக்கு டாக்டர்கள், என்ஜினீயர்களிலிருந்து சித்த வைத்தியர்கள் வரை வந்திருக்கிறார்கள். இப்போது விமான பைலட்டுகளும் வர ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபு யுவராஜும், அஷ்ரப்பும் ஒரே விமானத்தில் பைலட்டாக வேலை செய்கிறவர்கள். பிளைட்டில் பறக்கும்போதே கற்பனை உலகிலும் பறந்து ஒரு கதையை தயார் செய்து கொண்டு அதை படமாக எடுத்து வருகிறார்கள். படத்தின் தலைப்பு ர. பிரபு யுவராஜ் இயக்க, அஷ்ரப் ஹீரோவாக நடிக்கிறார். இருவரின் நண்பரான அமீன் தயாரிக்கிறார். அதிதி செல்லப்பா ஹீரோயின்.
வானத்திலிருந்து கோடம்பாக்கத்தில் குதித்ததை பற்றி பிரபு யுவராஜ் கூறியதாவது: பைலட் ஆகுறதுக்கு முன்னாடியே எனக்கு இயக்குனராகணும், அஷ்ரப்புக்கு நடிகராகணும்னு ஆசை. வெளிநாட்டுக்கு பிளைட் ஓட்டிட்டு போனால் இரண்டு நாள் ரெஸ்ட் தருவாங்க. அந்த இரண்டு நாளும் ரூமில் இருந்து உருவாக்கின கதைதான் ர.
ர என்ற எழுத்து சங்கத்தமிழில் பறிமுதல் என்று பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 16ம் நூற்றாண்டில் ஒரு அமானுஷ்ய சக்தி ஒன்றை பறிமுதல் செய்ய நினைக்கிறது. அப்போது அதனால் அது முடியவில்லை. மீண்டும் 2014ல் பறிமுதல் செய்ய புறப்பட்டு வருகிறது. அந்த சக்தி என்ன? அது பறிமுதல் செய்ய துடிப்பது எதை என்பதுதான் படம். என்கிறார் பிரபு.