இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கன்னட சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகராக இருப்பவர் கோமல் குமார். நம்ம ஊர் வடிவேலு மாதிரி பாடிலாங்குவேஜ் காமெடியில் அங்கு கலக்குபவர். அவர் பரத் நடிக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி என்ற படத்தில் காமெடியனாக நடிக்கிறார். பரத் பரம்பரை சித்தவைத்தியரின் வாரிசாக நடிக்க அவருக்கு எதிராக போலி சித்த வைத்தியராக கோமல் குமார் நடிக்கிறார்.
இந்தப் படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்கிறது. அட்டகத்தி நந்திதா ஹீரோயின். எல்.ஜி.ரவிசந்ந்திரன் என்ற புதுமுகம் இயக்குகிறார். இது முழுநீள காமெடி படம் என்பதால் கோமல் குமார் உள்பட 21 காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள். பரம்பரை சித்த வைத்தியர்கள் நிறைந்த பழனி பகுதியில் முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ளது.