‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்த ஜில்லா கடந்த ஜனவரி 9ந் தேதி ரிலீசானது. ஒரு சில தியேட்டர்களில் ஓரிரு காட்சியாக 50 நாளை தொட்டது. இப்போது சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ஒரே காட்சியாக 100 வது நாளை கடந்திருக்கிறது. சென்னை வெற்றிவேல், முருகன் தியேட்டர்கள் உள்பட தமிழ்நாட்டில் சில தியேட்டர்களில் ஷிப்டிங்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதை வெற்றிகரமான 110வது நாள் என்று அவர்கள் விளம்பரம் செய்தாலும், படம் ரிலீசாகி 100 வது நாள் என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஜில்லா பெரிய அளவில் லாபமும் சம்பாதிக்கவில்லை. பெரிய அளவில் நஷ்டத்தையும் சந்திக்கவில்லை என்பதே சினிமா வியாபார வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.
படத்தை தயாரித்த சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்திரி, மகன் ஜீவா நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க ரெடியாகிவிட்டார். இயக்கிய ஆர்.டி.நேசன் அடுத்த பட வாய்ப்புக்கான முயற்சியில் இருக்கிறார். விஜய், ஏ.ஆர்.முருகாதாசின் கத்தியை பிடித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் இன்று மாலை 6 மணிக்கு ஆல்பட் தியேட்டரில் வெற்றி விழாவும் கொண்டாட இருக்கிறார்கள்.