தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஷால், லட்சுமிமேனன் நடித்த நான் சிகப்பு மனிதன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. திரு இயக்கி இருந்தார். விஷால் பிலிம் பேக்டரியுடன் இணைந்து, யுடிவி தயாரித்தது. படம் பரவலான பாராட்டுகளை பெற்றிருந்தாலும் இடைவேளைக்கு பிறகு படம் நீளமாக இருப்பதாகவும் "இதயம் உன்னை தேடுதே..." என்ற பாடல் கதையின் வேகத்தை குறைப்பதாக இருப்பதாககவும் விமர்சனங்கள் குறிப்பிட்டன. இதைத் தொடர்ந்து இயக்குனர் திரு அந்த பாடல் காட்சியை நீக்கியதோடு. படத்தின் வேகத்துக்கு தடையாக இருந்த மேலும் இரண்டு காட்சிகளையும் நீக்கிவிட்டார். மொத்தமாக 7 நிமிடங்கள் வரை நீளம் குறைக்கப்பட்டுள்ளது.
இதயம் உன்னை தேடுதே பாடல் குழுமனாலி பனிமலையில் ஒரு வாரமாக படமாக்கப்பட்டது. கடும் குளிரில் விஷாலும், லட்சுமி மேனனும் நடித்தனர். படம் முழுக்க விஷால் தூங்கி வழிவார். இந்த பாடலில் லட்சுமிமேனன் தூங்கிக் கொண்டிருப்பார். பாடல் காட்சி நீக்கப்பட்ட தகவலை தயாரிப்பாளர்களில் ஒருவரான யுடிவி தனஞ்செயன் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.