விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
மைனா, கும்கி படங்களைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கி வரும் படம் கயல். இப்படத்திலும் புதுமுகங்களையே ஜோடி சேர்த்துள்ள அவர், மைனா, கும்கி படங்களில் தம்பி ராமைய்யா நடித்தது போன்ற ஒரு வெயிட்டான வேடத்தில் இமான் அண்ணாச்சியை நடிக்க வைப்பதாக அப்படம் தொடங்கப்பட்டபோதே குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அதன்பிறகு மொத்தமாக 3 மாதங்களுக்கு இமான் அண்ணாச்சியிடம் கால்சீட் கேட்டாராம் பிரபுசாலமன். ஆனால், கைவசம் பல படங்களை வைத்திருக்கும் இமான் அண்ணாச்சியினால் அவர் கேட்டது போன்று மொத்தமாக கால்சீட் கொடுக்க முடியவில்லையாம். இருப்பினும், உங்களுக்குப்பதிலாக வேறு நடிகரை நடிக்க வைத்துக்கொள்கிறேன் என்று எதுவும் சொல்லவில்லையாம் பிரபுசாலமன்.
அதனால் தனக்கு பின்னர் அழைப்பு வரும் என்று காத்துக்கொண்டிருந்த இமான் அண்ணாச்சி இப்போது வரை கயல் படத்தில் தன்னை நடிக்க அழைப்பார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இப்போதோ கயல் படமும் இறுதிக்கட்டததை எட்டி விட்டது. அதனால் அப்படத்தில் அவர் இருக்கிறாரா? இல்லையா? என்பதை அப்பட வட்டாரத்தை அணுகி விசாரித்தபோது, இமான் அண்ணாச்சி நடிக்கயிருந்த வேடத்தில் இன்னொரு புதுமுக நடிகரை நடிக்க வைத்து விடடார் பிரபுசாலமன் என்ற தகவல் கிடைத்தது.