Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு அமைப்புகளிடம் சமரசம்....வடிவேலுவை வறுத்தெடுத்த சீமான்...

17 ஏப், 2014 - 17:38 IST
எழுத்தின் அளவு:

வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் படம் நாளை வெளிவரவிருக்கிறது. கடந்த வாரம் தெனாலிராமன் படத்துக்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் ஒரு பகுதியாக வடிவேலுவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முயற்சி செய்ததை அடுத்து, வடிவேலுவுக்கு ஆதரவாக சீமான் அறிக்கை வெளியிட்டார். சீமானைத் தொடர்ந்து, திரைப்பட இயக்குநர் வ.கௌதமனும், பாரதிராஜாவும் வடிவேலுவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்கள்.


இந்நிலையில் தெனாலிராமன் படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வரவும் வடிவேலு பயந்து போனாராம். தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக தன் படம் வெளியாகாமல் போய்விடுமோ என்ற பயம் வடிவேலுவை வாட்டி வதைக்க, காட்ரகட்ட பிரசாத் என்ற தயாரிப்பாளர் மூலமாக ரகசியமாக தெலுங்கு அமைப்புகளுக்கு தூதுவிட்டிருக்கிறார். அவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அதன்படி தெலுங்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை நேற்று சந்தித்து பேசினார் வடிவேலு.


இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சீமான் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாராம். இன்னொரு பக்கம் பாரதிராஜாவும் வடிவேலு மீது கடுப்பாகிவிட்டாராம். தேர்தல் பிரச்சாரத்துக்காக வெளியூர்களில் முகாமிட்டிருக்கும் சீமான், வடிவேலுவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது காமெடி புயலை கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்திருக்கிறார் சீமான்.


Advertisement
சட்டத்தை மதிக்கும் ஷாம், சட்டத்தை மிதிக்கும் ஆர்யா - புறம்போக்கு படத்தின் சீக்ரெட்ஸ்சட்டத்தை மதிக்கும் ஷாம், சட்டத்தை ... அஜீத்துக்காக சூப்பர் ஹிட் டியூன்களை ரெடி பண்ணுகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்! அஜீத்துக்காக சூப்பர் ஹிட் டியூன்களை ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    Tamil New Film ennai nokki paayum thotta
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in