தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திரு திரு துறு துறு என்ற படத்தில் அறிமுகமானவர் ரூபா மஞ்சரி. ஆனால் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்த நான் படம் தான் ரூபாவை பேச வைத்தது. அப்படத்தில் அவர் இடம்பெற்ற மக்காயால மக்காயால என்ற பாடல் 2012ல் இளவட்ட ரசிகர்களால் சூப்பர் ஹிட் பாடலாக அங்கீகரிக்கப்பட்டது. அதோடு அப்பாடலுக்கு ரூபா மஞ்சரி ஆடிய துள்ளலான நடனத்தில் கிறங்கிப்போனவர்கள் ஏராளம்.
இதை தெரிந்து கொண்ட அவர், இப்போது தான் நடிக்கும் படங்களிலும் அதுபோன்ற ஒரு பாடல் தனக்கு அவசியம் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே படங்களில் கமிட்டாகிறார். மேலும், படப்பிடிப்பில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களிடமும் அந்த மக்காயால மக்காயால பாடலை பாடியபடியே கலக்கல் ஆட்டம் போட்டு அவர்களை கலாய்க்கிறாராம். ரூபாவின் இந்த கலாய்ப்பில் கழுகு பட நாயகனான கிருஷ்ணா சமீபத்தில் சிக்கிக்கொண்டாராம்.
இதை நேற்று சென்னையில் நடைபெற்ற யாமிருக்கு பயமே படத்தின் பிரஸ்மீட்டில் தெரிவித்த கிருஷ்ணா, மக்காயால மக்காயாலன்னு ஒரு பாட்டுக்கு ஆடியோ பிரபலமான ஒரே நடிகை இவர்தானுங்கோ என்று ரூபா மேடையேறியதும் அவரை கலாய்த்தார். அதையடுத்து, அவரிடமிருந்து மைக்கை பிடுங்கி, நான் ஒரே பாட்டுல இவ்ளோ பேமஸ் ஆனதை கிருஷ்ணாவால தாங்கிக்க முடியல. அதான் அவருக்கு இவ்ளோ வயிற்றெரிச்சல் என்றார்.