‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் சிவாஜி. இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த சுமனுக்கு டப்பிங் பேசியவர் சுப்பு பஞ்சு. அதுவரை சின்னத்திரையில் நடித்து வந்த அவருக்கு, சிவாஜி படத்திற்கு பிறகுதான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து இப்போது ஓரளவு பேசப்படும் நடிகராகி விட்டார்.
இந்நிலையில், கடந்த 2002ல் வெளியான ஸ்பைடர்மேன் படத்தின் இரண்டாம் பாகமான அமேஸிங் ஸ்பைடர்மேன்-2 என்ற படம் தற்போது உருவாகியுள்ளது. லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் 3டி படமாக உருவாகியுள்ள இப்படம் மே 1-ந்தேதி தமிழகமெங்கும் ரிலீசாகிறது. அதையடுத்து, மே 2-ந்தேதி யுஎஸ்ஸில் வெளியாகிறது.
ஆங்கிலம் மட்டுமின்றி, இந்தி, தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ள இப்படத்தில் நடித்துள்ள வில்லன் ஜானி பாக்சுக்கு இந்தியில் டப்பிங் கொடுத்திருப்பவர் பாலிவுட் நடிகர் விவேக் ஓபுராய். அதேபோல் தமிழில் சுப்பு பஞ்சு டப்பிங் பேசியுள்ளார்.
நேற்று காலை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் இப்படத்தின் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை பத்திரிகைகளுக்கு திரையிடப்பட்டது. அப்போது சுப்பு பஞ்சு பேசுகையில், தமிழ் சினிமாவிற்குள் நான் வருவதற்கு சிவாஜி படத்தில் சுமனுக்கு பேசிய டப்பிங்தான் எனக்கு பிள்ளையார் சுழி போட்டது. அதன்பிறகு மளமளவென்று படங்கள் புக்காகின.
அதேபோல் இப்போது ஹாலிவுட் படத்திற்கும் டப்பிங் பேசியுள்ளேன். வில்லன் ஜானி பாக்சுவின் உருவத்தற்கேற்ப எனது குரலை மாற்றி கரகரப்பாக பேசியிருக்கிறேன். நான் பேசியிருப்பதாக நானே சொன்னால்தான் மற்றவர்களுக்கு தெரியும். அந்த அளவுக்கு குரலை வித்தியாசமாக மாற்றி பேசியிருக்கிறேன் என்று கூறிய சுப்பு பஞ்சு, தமிழில் டப்பிங் பேசிய பிறகு நடிக்க சான்ஸ் கிடைத்தது போன்று, இந்த படத்தில் டப்பிங் பேசியிருப்பதால் இதன்பிறகு ஹாலிவுட் படங்களில நடிக்கவும் எனக்கு சான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார்.