Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தங்கமீன்களுக்கு 3 தேசிய விருதுகள் - மறைந்த பாலுமகேந்திராவின் தலைமுறைகள், வல்லினம் படத்திற்கும் தேசிய விருது!

16 ஏப், 2014 - 16:28 IST
எழுத்தின் அளவு:

பல்வேறு விருதுகளை பெற்ற தங்கமீன்கள் படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திராவின் தலைமுறைகள், நகுல் நடித்த வல்லினம் படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 61வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தங்கமீன்களுக்கு 3 தேசிய விருது

கற்றது தமிழ் படத்திற்கு பிறகு இயக்குநர் ராம் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த படம் தங்கமீன்கள். அப்பாவுக்கும் - மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டத்தை மையப்படுத்தி தங்கமீன்கள் படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தை ராமே இயக்கி, முதன்முறையாக ஹீரோவாகவும் நடித்து இருந்தார். ராமின் மகளாக சாதனா என்ற குழந்தை நடித்து இருந்தார். இயக்குநர் கவுதம் மேனன் இப்படத்தை தயாரித்து இருந்தார். தங்கமீன்கள் படம் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டை öபற்றது. சமீபத்தில் நடந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில், திரையிடப்பட்ட ஒரே தமிழ்படமும் தங்கமீன்கள் தான். இதுதவிர பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டு விருதுகளை öபற்றுள்ளது.

இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட 61வது தேசிய விருது பட்டியலில் ராமின், தங்க மீன்கள் படமும் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சிறந்த குழந்தை நட்சத்திரமாக இப்படத்தில் நடித்த சாதனாவுக்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருது, ஆனந்த யாழை... பாடலுக்காக நா.முத்துகுமாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்திற்கு விருது

சமீபத்தில் மறைந்த இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா, இயக்கத்தில் வெளிவந்து அனைத்து தரப்பினரின் பாரட்டை பெற்ற தலைமுறைகள் படத்திற்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒருமைப்பாட்டுக்கான விருதுக்கு இப்படம் தேர்வாகியுள்ளது. பாலுமகேந்திரா இயக்கி, ஒளிப்பதிவு செய்ததுடன் முதன்முறையாக (அதுவே கடைசியும் கூட...) அவரது நடிப்பில் வெளிவந்த படம் தலைமுறைகள். தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையேயான பாசத்துடன், நமது தமிழ் மண்ணின் கலாச்சாரம், பண்பு இவை எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்தது இந்த தலைமுறைகள். இப்படத்தை நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சசிகுமார் தயாரித்ததுடன் கெஸ்ட் ரோலில் ஒரு காட்சியிலும் நடித்து இருந்தார்.

வல்லினம் படத்திற்கும் தேசிய விருது

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஈரம் அறிவழகன் இயக்கத்தில், நகுல், மிருதுளா, அதுல் குல்கர்னி ஆகியோரது நடிப்பில் வெளிவந்த படம் தான் வல்லினம். கூடைப்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்திற்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருது, இப்படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய சபு ஜோசப்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி தவிர பிற மாநில படங்கள் மற்றும் கலைஞர்கள் பெற்ற தேசிய விருதுகள் விபரம்...

* சிறந்த நடிகர்

இந்தாண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாகித் என்ற இந்தி படத்தில் நடித்த ராஜ்குமார் ராவுக்கும், பெராரியாத்தவார் என்ற மலையாள படத்தில் நடித்த சூரஜ் வெஞ்சார்மூடுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* சிறந்த நடிகை - கீதாஞ்சாலி தபா (லியார்ஸ் டைஸ் - இந்தி)

* சிறந்த படம் - ஷிப் ஆப் தீசஸ் (இந்தி)

* சிறந்த பொழுதுபோக்கு படம் - பாக் மில்கா பாக் (இந்தி)

* சிறந்த குழந்தைகள் படம் - கப்கால்

* சிறந்த இயக்குநர்
- ஹன்சால் மேத்தா (படம் - ஷாகித் - இந்தி)

* சிறந்த துணை நடிகர் - சவுரப் சுக்லா (ஜாலி எல்எல்பி - இந்தி)

* சிறந்த துணை நடிகை - இரண்டு பேர் öபறுகின்றனர். அமிர்தா (அஸ்து - மராத்தி), அயிடா எல்காசெப் (ஷிப் ஆப் தீசஸ் - இந்தி)

* சிறந்த பின்னணி பாடகர் - ருபன்கார் பக்சி (ஜெயிதீஸ்வர் - பெங்காலி)

* சிறந்த பின்னணி பாடகி
- பெல்லா ஷெண்டே (துயா தர்மா கொன்சா - மராத்தி)

* சிறந்த இசை (பாடல்கள்)
- கபீர் சுமன் (ஜத்தீஸ்வர் - பெங்காலி)

* சிறந்த பின்னணி இசை
- சாந்தனு மொய்திரா (நான் பங்காரு தல்லி - தெலுங்கு)

* சிறந்த ஸ்பெல் எபெக்ட்ஸ்
- ஜல் (இந்தி)

* சிறந்த நடனம்
- கணேஷ் ஆச்சார்யா (பாக் மில்கா பாக் - இந்தி)

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in