ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவும், முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கும் காதலித்து வருவதுதான் பாலிவுட்டின் இப்போதைய ஹாட் டாபிக். ஆனால் இருவருமே வழக்கம்போல் இதனை மறுத்து வருகிறார்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று கூறிவருகிறார்கள்.
ரன்வீரும், தீபிகாவும் இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பாஜி ராவ் மஸ்தானி படத்தில் நடித்து வருகிறார்கள். காதலர்கள் இருவரும் இரவு பார்ட்டிகளுக்கு சென்று விடிய விடிய ஆட்டம் போடுவதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த பார்ட்டியில் பங்கேற்று விட்டு அதிகாலை 3 மணிக்கு திரும்பி உள்ளனர். இதனை படம் எடுத்த ஒருவர் அதை நெட்டில் வெளியிட்டிருக்கிறார். வெள்ளை பனியன், நீல நிற ஜீன்ஸ் என பார்ட்டி டிரஸ் கோட் அணிந்து இருவரும் ஜோடியாக வெளியில் வந்திருக்கிறார்கள் இதன் மூலம் இருவரின் காதலும் உறுதியாகி இருக்கிறது.