Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சன்னி லியோன் நீலப்பட நடிகை என்று தெரியாது: வடகறி இயக்குனர் தடாலடி

16 ஏப், 2014 - 14:14 IST
எழுத்தின் அளவு:

ஜெய், சுவாதி நடிக்கும் வடகறி படத்தை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிக்கிறது. வெங்கட் பிரபுவின் உதவியாளர் சரவண ராஜன் இயக்குகிறார். இதில் பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். இதனை தாய்லாந்தில் ஷூட் செய்திருக்கிறார்கள். சன்னி லியோன் படங்களுக்கு தமிழ் நாட்டில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் சன்னி லியோன் நீலப்பட நடிகை என்பதே தனக்கு தெரியாது என்று கூறுகிறார் இயக்குனர் சரவண ராஜன்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது : "படத்தில் கிளைமாக்சிற்கு முன்பு ஒரு குத்துப்பாடல் ஒன்று வருகிறது. அதில் பிரபலமானவர் ஒருவர் ஆடினால் படத்துக்கு பிளஸ்சாக இருக்கும் என்று கூறினேன். அப்போது இந்திப் படங்களில் கவர்ச்சியாக ஆடி புகழ்பெற்ற சன்னி லியோனை ஆட வைக்கலாம் என்று தயாரிப்பாளர் சொன்னார். இது பற்றி சன்னி லியோனிடம் பேசினார்கள். தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்து சன்னி அதற்கு உடனே ஒப்புக் கொண்டார்.

தமிழ்நாட்டில் செட் போட்டு அந்த பாடலை எடுக்க முடிவு செய்தோம். அதைவிட தாய்லாந்தில் எடுப்பது செலவு குறைவு என்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அவர் பாவாடை தாவணி அணிந்து ஆடியிருக்கிறார். சன்னி நீலப்பட நடிகை என்பது எனக்குத் தெரியாது. அவர் நடித்த படங்கள் எதையும் நான் பார்த்ததில்லை. பாடலை படமாக்கியது டான்ஸ் மாஸ்டர்தான். அதனால் அவருடன் நான் அதிகமாக பேசியதும் இல்லை. இது எல்லாமே தயாரிப்பாளிரின் முடிவு தான்" என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in