'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
கோவை வரும் பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, இன்று மாலை நடிகர் விஜய் சந்தித்து பேச உள்ளார். பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுக்க அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தமிழத்தில் இரண்டுநாள் சுற்றுபயணமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் மோடி. இன்று கோவையில் நடக்கும் பிரசாரத்தில் மோடி பங்கேற்க உள்ளார். கடந்த 13ம் தேதி, நரேந்திர மோடி சென்னை வந்தபோது, நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரஜினி, மோடியை பற்றி பேசும்÷பாது மிகவும் வலிமையான மனிதர் என்று பாராட்டினார்.
இந்தநிலையில் தமிழகத்தின் மற்றுமொரு முன்னணி நடிகரான விஜய், கோவை வரும் மோடியை சந்தித்து பேச இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் கோவை சென்றுள்ளார் விஜய். மாலை 7 மணியளவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு நடக்க இருக்கிறது. நட்பு ரீதியாக இந்த சந்திப்பு நடக்க இருக்கிறதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த சந்திப்பின் போது, மோடிக்கு தனது ஆதரவை விஜய் தருவார் என தெரிகிறது.
கடந்த முறை நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் அதிமுக.வுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதில் அதிமுக., வெற்றி பெற்றது. ஆனால் சமீபகாலமாக தன் படங்களுக்கு ஏற்பட்ட இடையூறு காரணமாக அதிமுக.,வுடன் அதிருப்தியில் இருக்கிறார் விஜய். ஆகையால் இந்த லோக்சபா தேர்தலில், விஜய் தனது ஆதரவை மோடிக்கு தருவார் என பரவலாக பேசப்படுகிறது. விஜய்யின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.