அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதுப்படத்தின் பூஜை தமிழ்ப்புத்தாண்டு அன்று நடைபெற்றது. திரையுலகில் பலருக்கும் அழைப்பு இல்லை. சூர்யா மற்றும் வெங்கட்பிரபுவுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு. முக்கியமாக மீடியாக்களுக்கு அழைப்பு இல்லை. அதுமட்டுமல்ல, மீடியாக்கள் யாரும் உள்ளே வராதபடி கண்காணிப்பும் பலமாக இருந்தது. பட பூஜையை இப்படி ரகசியமாக நடத்தியது என்? எல்லாம் சென்ட்டிமெண்ட் படுத்துகிற பாடுதான்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் - 2 படத்தின் பூஜையை இப்படித்தான் ரகசியமாக நடித்தினார்கள். சிங்கம் - 2 படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. எனவே, இந்தப்படமும் வெற்றியடைய வேண்டும் என்ற ஆசையில் சிங்கம்-2 படத்தின்போது கடைபிடிக்கப்பட்ட சடங்குகளை எல்லாம் இந்தப்படத்தின் தயாரிப்பிலும் கடைபிடிக்கத் திட்டமிட்டுள்ளளனர். அதில் ஒன்றுதான்.. மீடியாக்களை புறக்கணித்துவிட்டு பூஜை போட்டது. ஹரியின் பரபரப்பான திரைக்கதை, சூர்யாவின் அதிரடியான நடிப்பு என சிங்கம் - 2 படத்தின் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும்போது, அதை எல்லாம் மறந்துவிட்டு இப்படிப்பட்ட அல்ப சென்ட்டிமெண்ட்டுகளை நம்புவது காமெடியாக இருக்கிறது.