ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
பசங்க, கோலிசோடா, சித்திரையில் நிலாச்சோறு போன்ற குழந்தைகள் பட வரிசையில் தற்போது சைவம் படமும், அழகுகுட்டி செல்லமும் குழந்தைகள் படமாக உருவாகி வருகிறது.
அழகுகுட்டி செல்லத்தை தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியை நடத்தி வரும் ஆண்டனி தயாரிக்கிறார். அவரது நண்பர் சார்லஸ் இயக்குகிறார். கருணாஸ் மகன் கென் கருணாஸ், சாணக்யா, யாழினி, ராஜேஷ், நஹோபாபி, ஜெயசித்ரா என்ற குழந்தைகளுடன் கருணாஸ், அகில், தம்பி ராமையா, நரேன், ஜான் விஜய் உள்பட 25 நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்கிறார், வேத சங்கர் சுகவனம் இசை அமைக்கிறார்.
குழந்தைகளின் மெல்லிய உணர்வுகளை பெரியவர்கள் புரிந்து கொள்வதில்லை. காலத்தின் வேகமான ஓட்டத்தில் குழந்தைகளிடமிருந்து நாம் அவர்களின் குழந்தை தனத்தை எப்படி பறிக்கிறோம் என்பதை பற்றி சொல்லுகிற படம். செண்டிமெண்டும், அழகியலுமாக குழந்தைகள் உலகத்துக்குள் அழைத்துச் செல்கிற படம். படத்தின் படப்பதிவு பணிகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது.