இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி |
மலையாள பட தயாரிப்பு நிறுவனமான நியூ டிவி நிறுவனம் தயாரிக்கும் தமிழ் படம், திருந்துடா காதல் திருடா. ஆதில், சுதக்ஷானா, என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். மலையாள நடிகர்களான முகேஷ், கொச்சு பிரேமன், ரஷிய நடிகை ஒல்காகோவல்ச்சக் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
தமிழ், மலையாள மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை மலையாள இயக்குனர் அசோக் ஆர்.நாத் இயக்குகிறார். அரபு நாடுகளான துபாய், ஷார்ஜா, அலைன், ராசல்கைமா, அஜ்மான், உமல் குவைன், ஃயூஜேரா போன்ற இடங்களில் தயாராகி உள்ளது. ஒரே ஒரு போர்ஷன் மட்டும் திருவெட்டாறில் படமாக்கி உள்ளனர்.
படத்தின் தயாரிப்பு குறித்து இயக்குனர் நாத் கூறியதாவது: உலகிலேயே பவர்புல்லான ஒரே விஷயம் காதல்தான். மனிதனின் எல்லா செயல்களுக்குப் பின்னாலும் ஒரு காதல் இருக்கும். காதலை அனுமதிக்காத அரபு தேசத்திலும் அது எப்படி வளர்கிறது என்று சொல்லும் படம். இதுவரை படப்பிடிப்பு நடந்திராத அரபு நாடுகளின் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்றார்.