ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிரிப்பு நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பது ஒன்றும் புதிதில்லைதான். கலைவாணர் தொடங்கி கருணாஸ் வரை எல்லா காலக்கட்டங்களிலும் சிரிப்பு நடிகர்கள் கதாநாயகனாக நடித்திருக்கின்றனர். இந்தப் பட்டியலில் சந்தானமும் சேர்ந்துவிட்டார். விஜய் டிவியின் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் சிரிக்க வைத்தவர், மன்மதன் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்த சந்தானம் சில வருடங்களில் வடிவேலு, உள்ளிட்டவர்களை ஓரங்கட்டிவிட்டு நம்பர் ஒன் சிரிப்பு நடிகரானார். கதாநாயகனைவிட அதிக சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்த சந்தானம், அடுத்த முயற்சியாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கதாநாயகனாகிவிட்டார். இப்படம் விரைவில் வெளிவரவிருக்கும்நிலையில் தன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார் சந்தானம். அதாவது இனி காமெடியனாக நடிப்பதில்லை, கதாநாயகனாக மட்டுமே நடிப்பது - என்பதே சந்தானம் எடுத்த அதிரடி முடிவாகும்