Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோச்சடையான் படத்தில் ரஜினி நடித்தது சில காட்சிகளில் மட்டுமே...!

14 ஏப், 2014 - 16:15 IST
எழுத்தின் அளவு:

கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு, மே 9 ஆம் தேதி படம் வெளியாக உள்ளநிலையில்.... கோச்சடையான் பற்றிய ரகசிய செய்தி ஒன்று நம் காதுக்கு வந்தது. அதாவது நடிப்பு பதிவாக்கம் என்கிற மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகி வருகிறது. அவதார் படத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் ஆசியாவிலேயே முதன்முறையாக கோச்சடையான் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


உடல்நிலை சரியில்லாமல் சங்கப்பூரில் சிகிச்சை பெற்றுத்திரும்பிய பிறகு ரஜினியினால் டான்ஸ் ஆடுவது, ஃபைட் பண்ணுவது போன்ற கடினமான பணிகளை செய்ய முடியாது. எனவேதான் நடிப்பு பதிவாக்கம் மூலம் அவருக்கு கஷ்டம் கொடுக்காமல் கோச்சடையான படத்தை எடுத்திருக்கிறார் அவரது மகள் சௌந்தர்யா.


கோச்சடையான் படத்தில் ஆரம்பத்தில் சில நாட்கள் உற்சாகமாக நடித்த ரஜினியால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய் ரொம்பவே சிரமப்பட்டாராம். எனவே ரஜினிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அவர் நடிக்க வேண்டிய 90 சதவிகித காட்சிகளை டூப்பை வைத்தே எடுத்திருக்கின்றனர். விஜய் டிவி ஜோடி நிகழ்ச்சியில் நடனம் ஆடும் யுவராஜ் என்ற டான்ஸரும், மற்றொரு சிரிப்பு நடிகரும்தான் ரஜினிக்கு டூப் போட்டு நடித்துள்ளனர்.


இதில் முக்கியமாக விஷயம்...கோச்சடையான் படத்தின் நாயகியான தீபிகா உடன் ஒரு ஷாட்டில் கூட ரஜினி நடிக்கவில்லை. டூப்தான் நடித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in