ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சேது. இவர் நிஜத்தில் சந்தானத்தின் பால்ய கால சிநேகிதர். டாக்டராக இருந்து வரும் அவருக்குள்ளும் நடிப்பு ஆசை இருந்து வந்ததால், தருணம் பார்த்து அவரையும் சினிமாவிற்குள் கொண்டு வந்து விட்டார் சந்தானம். அப்படத்தையடுத்து இப்போது சேது நடித்து வரும் படம்தான் வாலிபராஜா. இந்த படத்தில் காதல் முத்தி பைத்தியமாகிப்போகும் அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கும் டாக்டராக நடித்துள்ளார் சந்தானம். சேது கதாநாயகன் என்றாலும், படத்தில் சந்தானம்தான் நாயகன் போல் கதையை நகர்த்தி செல்கிறாராம். அதுமட்டுமின்றி, உதயநிதியுடன் சந்தானம் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடியில் இடம்பெற்ற வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலே -என்ற பாடலைப்போன்று இந்த படத்திலும் ஒரு பாடலில் சந்தானம், சேது இருவரும குத்தாட்டம் போட்டிருக்கிறார்களாம்
அண்டமாமுனிவரெல்லாம் அடங்கிப்போவார் பெண்ணுக்குள்ளே - என்று அண்ணாமலை எழுதியுள்ள அந்த பாடலில் ஆண்களை பெண்கள் ஏமாற்றுவதையும், அதேபோல் பெண்களை ஆண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதையும இந்த காலத்து பாணியில் அப்பாடலில் சொல்லியிருக்கிறார்களாம். ஆக, இப்படத்தின் பாடல் வெளியாகும்போது, இளவட்டங்களின் ரிங்டோனாக இந்த பாடல்தான் இருக்கும் என்று இப்போதே ஆரூடம் சொல்கிறார்கள்.