பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனது மூத்த மகன் சிலம்பரசனைப்போலவே, இளைய மகனான குறளரசனையும் சினிமாவில் ஹீரோவாக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் டி.ராஜேந்தர். ஆனால், அதற்கான பயிற்சிகளில் அவர் இறங்கியபோது, அவரது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பண்ணுவது கடினமான விசயமாக இருந்ததாம். அப்பா டி.ராஜேந்தரைப்போலவே குறளரசனின் உடல்கட்டும் வெயிட் குறைய மறுத்ததால், இதற்காக மெனக்கெட்டு டயத்தை வேஸ்ட் பண்ணுவதை விட மகனை இசைத்துறையில் இறக்கி விடலாமே என்று முடிவை மாற்றி விட்டாராம் டி.ஆர்.,
அதனால்தான் ஹீரோவாக களமிறங்க இருந்த குறளரசன் இசையமைப்பாளர் அவதாரமெடுத்திருக்கிறார். ஏற்கனவே அப்பா, அண்ணன் சிம்பு என இருவருமே இசைக்கலைஞர்களாகவும் இருப்பதால் அவர்களது ஆலோசனையோடு தற்போது இது நம்ம ஆளு படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார் குறளரசன். ஆக, அப்பாவைப்போன்று செண்டிமென்டான பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாராம்.
மேலும், அப்பா பாணியில் இசை வடிவம் கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கும் குறளரசன், அவரைப்போலவே பக்தி பழமாகவும் இருக்கிறார். தினமும் வீட்டை விட்டு வெளியே கிளம்புபோதும் சரி, ரெக்கார்ட்டிங் தியேட்டருக்கு செல்லும்போதும் சரி, தனது வீட்டு பூஜை அறையில் உள்ள சாமிகளை வணங்கும் அவர், தனது பாட்டியின் போட்டோவுக்கு முன்பு சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி விட்டே வெளியில் செல்கிறார். தந்தை டி.ஆர்., தினமும் செய்யும் இந்த வழக்கத்தை இப்போது குறளரசனும் பின்பற்றி வருகிறார்.