Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் சூர்யா உடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்!

12 ஏப், 2014 - 15:58 IST
எழுத்தின் அளவு:

கமலின் மகள் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக அறிமுகமானது லக் என்ற ஹிந்திப்படத்தில்தான். தமிழில் அவர் கதாநாயகியாய் நடித்த முதல் படம் 7 ஆம் அறிவு. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த ஸ்ருதிஹாசன், அதன் பிறகு தெலுங்கு, ஹிந்திப்படங்களில் பிஸியாகிவிட்டார். பின்னர் அவர் தமிழில் நடித்தது 3 படத்தில்தான். இந்தப் படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்தார். இந்தப்படத்தில் தனுஷ் உடன் நடித்தபோது இருவருக்கும் கெமிஸ்ட்ரி உண்டாக, அது ரஜினி குடும்பத்தில் புயலைக்கிளப்பியது.


ரஜினி கமல் இருவரும் எடுத்த முடிவின்படி ஸ்ருதிஹாசன் மும்பையில் செட்டிலானார். அதன்பிறகு தமிழ்ப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹரி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக பூஜை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போட்டோஷூட் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. அதற்காக மும்பையிலிருந்து சென்னை வந்த ஸ்ருதிஹாசன், வெங்கட்பிரபுவிடம் கதை கேட்டார். அவர் சொன்னகதை பிடித்துப்போகவே, அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்தப் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். 7 ஆம் அறிவு படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா உடன் ஜோடி சேருகிறார் ஸ்ருதிஹாசன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in