சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டி, அதையடுத்து விஷால் நடித்த திமிரு படத்தில் அதிரடி வில்லியாக நடித்தார். தமிழ் சினிமாவில் வில்லிகளாக நடித்த சொர்ணாக்கா போன்ற நடிகைகளெல்லாம் கதிகலங்கிப்போகும் அளவுக்கு மிரட்டலாக நடித்த ஸ்ரேயா ரெட்டி, அதையடுத்து வெயில், பள்ளிகூடம் உள்பட சில படங்களில் நடித்தவர் பின்னர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டார்.
ஆனபோதும், விஷாலைக்கொண்டு விக்ரம் கிருஷ்ணா தயாரித்த சில படங்களில் பணியாற்றிய ஸ்ரேயா ரெட்டி, பல ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜை படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். திமிரு படத்தில் அவரது மிரட்டலான நடிப்பைப்பார்த்து வியந்த இயக்குனர்களில் ஹரியும் ஒருவர் என்பதால், இந்த படத்தில் அவருக்கும் ஒரு அதிரடியான கேரக்டரையே கொடுத்துள்ளாராம்.
அதனால் இப்படம் தனக்கு ஒரு நல்ல ரீ-என்ட்ரியாக இருக்கும் என்று மீண்டும் கோதாவில் இறங்கியுள்ள ஸ்ரேயாரெட்டி, இந்த படத்திற்கு பிறகே அடுத்தடுத்து புதிய படங்களில் நடிப்பது பற்றி முடிவெடுப்பாராம்.