'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மன்மதன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த சிம்பு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். சிம்புவும் இயக்குநர் செல்வராகவனும் இணையும் முதல் படம் இது. த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு இருவரும் இப்படத்தில் ஜோடி சேருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இதுவரை ஏற்று நடிக்காத வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களை இப்படத்தில் ஏற்று நடிக்கவுள்ளாராம் சிம்பு. அதாவது உடல் ரீதியான வித்தியாசத்தைக் காட்டவுள்ளாராம். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மது அம்பட் ஒளிப்பதிவு செய்ய, ஜெயமோகன் வசனங்களை எழுத இருக்கிறார். ரொமாண்டிக் த்ரில்லர் வகையைச் சேர்ந்த படம் என்று கேள்வி.
இந்தப் படத்திற்கு அலைவரிசை என்று பெயர் வைத்திருக்கிறார் செல்வராகவன். சிம்புவுக்கும் செல்வராகவனுக்கும் அலைவரிசை ஒத்துப்போனால் அலைவரிசை படம் திட்டமிட்டபடி நடக்கும். இல்லை என்றால்...